தளர்வு
சற்றே குறுகலான அந்த தெருவில் பெல் அடித்துக்கொண்டே சிரமப்பட்டு பால்காரர் நுழைந்தார்.சிரமத்திற்கு காரணம் ஒரு சின்ன யானை வண்டி.அந்த வண்டியில் பீரோ,மடக்கு கட்டில்,சேர்கள்,பாத்திரங்கள்,ஸ்டவ் என சாமான்கள் ஏற்றப்பட்டு இருந்தன.ஆட்கள் இன்னமும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.”யார் வீடு காலிபண்றாங்க ? என்று பால்காரர் பக்கத்து டீக்கடைகாரரிடம் கேட்டார். “இங்க கட்டிட வேலைக்கு ஆள் சேர்த்து விடுவாரே மேஸ்திரி! அவர் வீட்ல காலி பண்றாங்க! “எங்கே அவரை காணோம்?” என்று பால்காரர் கேட்க “அவரெல்லாம் ஜூன் மாசமே ஊருக்கு போயிட்டார்,இப்போ அவர் உறவுக்கார பையனை வைத்து காலி பண்றார்.”அய்யோ! எனக்கு காசு பாக்கி இருக்கே, என்ன செய்ய என்று பதறினார் பால் காரர்.”அதோ அந்த பையன்தான் உறவுக்கார பையன்,அவன் கிட்ட கேளுங்க” என்று ஐடியா கொடுத்தார் டீக்கடைக் காரர். “ எப்பா தம்பி! நான் தணிகாசலம் சார் வீட்டுக்கு பசுமாட்டு பால் கொடுக்கிறவன்,...