பேரைச் சொல்லவா!
வேல், வேல், வெற்றி வேல், வேல் இருக்க வினையும் இல்லை, மயில் இருக்க பயமும் இல்லை, அடைவோம் கந்தன் சேவடி என்று சூலமங்கலம் சகோதரிகள் உணர்ச்சிபூர்வமாக பாடிக் கொண்டு இருந்தார்கள். பழைய பாடல் தான் என்றாலும் இன்று வரை மனதை தொடும் பாடல். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை, என் பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எங்க அம்மா கிட்ட, " ஒரு குக்கிராமத்தில் கூட மாடர்னா பேர் வைக்கிறார்கள், எனக்கு ஏன் இந்த பெயர் வைச்சிங்க? சம்மந்தமே இல்லாமல் இரண்டு பெயர் ஒன்று சேர்த்து, அர்த்தமே இல்லை " என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். "ஆச்சி தான் இந்த பெயர் உனக்கு வைத்தார்கள்" என்று அம்மா தப்பித்துக் கொள்வார்கள். ஆச்சியிடம் அடிக்கடி தொணதொணப்பேன், "ஏன் ஆச்சி இப்படி ஒரு பெயர் வைச்சிங்க?! ". அதற்கு ஆச்சி, " அழகோடும், அறிவோடும் என் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் உன் பெயர் வைக்கிறேன் முருகா! " என்று வேண்டிக் கொண்டேன் என்றார்கள் பெருமையாக. எனக்கு அது மிகை தான் என்பது வேறு விஷயம். எல்லா ஆச்சிகளுக்கும் பேரப...