பத்ம ஸ்ரீ விவேக்
பாலசந்தர் கண்டெடுத்த கண்மணி மெலிந்த தேகம் தெளிந்த உச்சரிப்பு இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற பன்ச் டயலாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்த கலைஞர். கலைஞர் பணி மகிழ்விக்க மட்டுமே என்று இல்லாமல் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் சிந்திக்க வைத்த மகா நடிகர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பயணித்து நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் மூடநம்பிக்கைகள் களைந்து சமூக அறிவியல் பாடம் எடுத்த சீர்திருத்த சிற்பி கலாம் அய்யா கட்டளையை ஏற்று லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகள் செய்த மாமனிதர் டுவிட்டரில் அவசியமான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அறிவுஜீவி விவேகானந்தர் கொள்கைகளை வாழ்ந்து காட்டிய மக்கள் கலைஞர் வாழ்க்கையின் கடைசி நாள் கூட மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த செலவிட்டார். முப்பத்து ஐந்து லட்சத்துக்கும் மேலாக மரக்கன்றுகளை இயற்கைக்கு தந்த பெருந்தகையை இயற்கை இவ்வளவு சீக்கிரமாய் அழைத்து கொள்ள வேண்டுமா?