மீனாட்சி சுந்தரேஸ்வரர்
நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது, “மீனாட்சி சுந்தரேஸ்வரர்”. முதல் நாளில் இருந்து விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் பஞ்சமில்லை. பாக்ய ஸ்ரீ யின் மகன், அபிமன்யு, சுந்தரேஸ்வரராகவும், சனயா மல்கோத்ரா மீனாட்சியாக நடித்திருக்கிறார்கள். மதுரையில் ஆரம்பித்து பெங்களூரு நகர்கிறது கதை. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தென் தமிழக பீலிங் வருகிறது. சில தமிழ் முகங்கள், பெயர்கள், கோயில்கள் மற்றபடி கதைக்கும், மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதுரை என்றாலே ஜிகர்தண்டா, கறித்தோசை, தமிழ்நாடு என்றாலே “தலைவா ரஜினிகாந்த்” போன்ற கிளிஷேக்கள் அயர்ச்சியைக் கொடுக்கின்றன. மதுரையில் செட்டி நாட்டு ஸ்டைல் வீடு ஓகே! ஆனால் பில்டர் காபி மெட்ராஸா? மதுரையா? மக்களே?! பவ்யமான, மாநிறமான, சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் சுந்தரேஸ்வரராக அபிமன்யு பொருந்திப் போகிறார். அளவான நடிப்பு, பாக்ய ஸ்ரீ யின் புன்சிரிப்பு இருப்பதாலோ, இல்லை, வேஷ்டியில் டும் டும் டும் மாதவனை ஞாபகப்படுத்தியதினாலோ என்னவோ அபிமன்யுவை எனக்கு பிடித்து விட்டது. ஆனால் மீனாட்சியாக சன...