Posts

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது, “மீனாட்சி சுந்தரேஸ்வரர்”. முதல் நாளில் இருந்து விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் பஞ்சமில்லை.  பாக்ய ஸ்ரீ யின் மகன், அபிமன்யு, சுந்தரேஸ்வரராகவும்,  சனயா மல்கோத்ரா மீனாட்சியாக நடித்திருக்கிறார்கள்.  மதுரையில் ஆரம்பித்து பெங்களூரு நகர்கிறது கதை.  ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தென் தமிழக பீலிங் வருகிறது.  சில தமிழ் முகங்கள், பெயர்கள், கோயில்கள் மற்றபடி கதைக்கும், மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மதுரை என்றாலே ஜிகர்தண்டா, கறித்தோசை,  தமிழ்நாடு என்றாலே “தலைவா ரஜினிகாந்த்” போன்ற கிளிஷேக்கள்  அயர்ச்சியைக் கொடுக்கின்றன.  மதுரையில் செட்டி நாட்டு ஸ்டைல் வீடு  ஓகே!  ஆனால் பில்டர் காபி மெட்ராஸா? மதுரையா? மக்களே?!  பவ்யமான, மாநிறமான, சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும்  சுந்தரேஸ்வரராக அபிமன்யு பொருந்திப் போகிறார்.  அளவான நடிப்பு, பாக்ய ஸ்ரீ யின் புன்சிரிப்பு இருப்பதாலோ, இல்லை, வேஷ்டியில்  டும் டும் டும் மாதவனை ஞாபகப்படுத்தியதினாலோ என்னவோ அபிமன்யுவை எனக்கு பிடித்து விட்டது.  ஆனால் மீனாட்சியாக சன...

வைரஸ் ஆழிப்பேரலை

 பஞ்ச பூதங்கள் ஐந்தையும் நாசம் செய்து நிலாவில் குடியேற நாள் குறித்து இறுமாப்புடன் இருந்த மனிதனை கண்ணுக்குத் தெரியாத ஜீவன் ஒன்று அடங்குடா அடங்கு என வீட்டில் முடக்கியது. பள்ளி கல்லூரிகள் இல்லை கோயில் திருவிழாக்கள் நடக்கவில்லை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கவில்லை ஆறு மாதங்கள் பேயாட்டம் ஆடி மனித மாணிக்கங்கள் பலரையும் கொண்டு சென்றது. கொஞ்சம் அடங்கிய போது முக கவசம் அணிந்து சென்றால் உங்களுக்கு இன்னும் கொரனா போகலையா இதை யாரு போட்டுக் கிட்டே இருப்பா இதுவே மூச்சு முட்டுகிறது வீட்டில் உள்ளேயே இருந்தா பைத்தியம் பிடிக்கும் போல குழந்தைகள் பாவம் எவ்வளவு நேரம் ஆன்லைன் மூலம் படிக்கிறது டெஸ்ட் வைச்சா பாதிபேர் காப்பி அடிக்கிறது ஸ்கூல் லாம் அனுப்ப முடியாது குழந்தைகளுக்கு வந்திட்டா ஸ்கூல் பீஸ் கட்ட வைக்க இப்படி பண்றாங்க இதென்ன அநியாயம் எல்லாரும் பாஸாம் படிக்கிற பிள்ளை க்கு என்ன மரியாதை தடுப்பு ஊசி போடலாமா வேண்டாமா பக்க விளைவுகள் ஏற்படுமா? உடன்பிறப்பே இரத்தின் ரத்தமே தம்பி தமிழா டார்ச் லைட்டில் ஒளி பாய்ந்து குக்கரில் விசில் அடித்து இது வரை மலரா தாமரை சீசன் மாம்பழம் எல்லாம் சீர் தூக்கி விரலில் மையிட்டு முடி...

பத்ம ஸ்ரீ விவேக்

Image
பாலசந்தர் கண்டெடுத்த கண்மணி மெலிந்த தேகம் தெளிந்த உச்சரிப்பு இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற பன்ச் டயலாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்த கலைஞர்.  கலைஞர் பணி மகிழ்விக்க மட்டுமே என்று இல்லாமல்  நடித்த ஒவ்வொரு காட்சியிலும் சிந்திக்க வைத்த மகா நடிகர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பயணித்து   நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் மூடநம்பிக்கைகள் களைந்து  சமூக அறிவியல் பாடம் எடுத்த  சீர்திருத்த சிற்பி கலாம் அய்யா கட்டளையை ஏற்று லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகள் செய்த மாமனிதர் டுவிட்டரில் அவசியமான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அறிவுஜீவி விவேகானந்தர் கொள்கைகளை வாழ்ந்து காட்டிய மக்கள் கலைஞர் வாழ்க்கையின் கடைசி நாள் கூட மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த செலவிட்டார்.  முப்பத்து ஐந்து லட்சத்துக்கும் மேலாக  மரக்கன்றுகளை இயற்கைக்கு தந்த பெருந்தகையை  இயற்கை இவ்வளவு சீக்கிரமாய் அழைத்து கொள்ள வேண்டுமா? 

பேரைச் சொல்லவா!

வேல், வேல், வெற்றி வேல்,  வேல் இருக்க வினையும் இல்லை,  மயில் இருக்க பயமும் இல்லை,  அடைவோம் கந்தன் சேவடி என்று சூலமங்கலம் சகோதரிகள் உணர்ச்சிபூர்வமாக பாடிக் கொண்டு இருந்தார்கள். பழைய பாடல் தான் என்றாலும் இன்று வரை மனதை தொடும் பாடல்.                     எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை, என் பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எங்க அம்மா கிட்ட, " ஒரு குக்கிராமத்தில் கூட மாடர்னா பேர் வைக்கிறார்கள், எனக்கு ஏன் இந்த பெயர் வைச்சிங்க? சம்மந்தமே  இல்லாமல் இரண்டு பெயர் ஒன்று சேர்த்து, அர்த்தமே இல்லை " என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். "ஆச்சி தான் இந்த பெயர் உனக்கு வைத்தார்கள்" என்று அம்மா தப்பித்துக் கொள்வார்கள்.  ஆச்சியிடம் அடிக்கடி தொணதொணப்பேன், "ஏன் ஆச்சி இப்படி ஒரு பெயர் வைச்சிங்க?! ". அதற்கு ஆச்சி, " அழகோடும், அறிவோடும் என் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் உன் பெயர் வைக்கிறேன் முருகா! "  என்று வேண்டிக் கொண்டேன் என்றார்கள் பெருமையாக. எனக்கு அது மிகை தான் என்பது வேறு விஷயம். எல்லா ஆச்சிகளுக்கும் பேரப...

தளர்வு

                                   சற்றே குறுகலான அந்த தெருவில் பெல் அடித்துக்கொண்டே சிரமப்பட்டு பால்காரர் நுழைந்தார்.சிரமத்திற்கு காரணம் ஒரு சின்ன யானை வண்டி.அந்த வண்டியில் பீரோ,மடக்கு கட்டில்,சேர்கள்,பாத்திரங்கள்,ஸ்டவ் என சாமான்கள் ஏற்றப்பட்டு இருந்தன.ஆட்கள் இன்னமும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.”யார் வீடு காலிபண்றாங்க ? என்று பால்காரர் பக்கத்து டீக்கடைகாரரிடம் கேட்டார். “இங்க கட்டிட வேலைக்கு ஆள் சேர்த்து விடுவாரே மேஸ்திரி! அவர் வீட்ல காலி பண்றாங்க! “எங்கே அவரை காணோம்?” என்று பால்காரர் கேட்க “அவரெல்லாம் ஜூன் மாசமே ஊருக்கு போயிட்டார்,இப்போ அவர் உறவுக்கார பையனை வைத்து காலி பண்றார்.”அய்யோ! எனக்கு காசு பாக்கி இருக்கே, என்ன செய்ய என்று பதறினார் பால் காரர்.”அதோ அந்த பையன்தான் உறவுக்கார பையன்,அவன் கிட்ட கேளுங்க” என்று ஐடியா கொடுத்தார் டீக்கடைக் காரர்.                        “ எப்பா தம்பி! நான் தணிகாசலம் சார் வீட்டுக்கு பசுமாட்டு பால் கொடுக்கிறவன்,...

உதயகீதம் எஸ்.பி.பி.

Image
ஆயிரம் நிலவே வா வில் தென்றலாய் வருட ஆரம்பித்து, இன்று சும்மா கிழி கிழி என்று உரக்க ஒலித்த குரல். சங்கராபரணமோ! என பக்தியில் திழைத்த  காதல் ரோஜாவே என்று உருகிய தங்கதாமரை மகளே என்று மருகிய சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிய  மக்கள் திலகம்,நடிகர் திலகம் காதல் மன்னன்,காதல் இளவரசன் நவரச நாயகன்,மைக் மோகன் தல,தளபதி ராமாராவ்,நாகேஸ்வர ராவ் பால கிருஷ்ணா,சிரஞ்சீவி, பவன்கல்யாண்,மகேஷ்பாபு, நாகார்ஜூனா,நாகசைத்ன்யா மம்முட்டி மோகன்லால் ராஜ்குமார் விஷ்ணுவர்த்தன் சல்மான் சஞ்சய்... என அனைவரின்  காதல்,மோதல்,உற்சாகம், கருத்து,துன்பம்,துயரம் என்று யாவருக்கும் பொருந்தும் குரல். மென்மை,வலிமை ஆக எந்த தொனியிலும்,  ஏற்றமாய் ஊக்கமாய் பாடும் கம்பீரம், உதயகீதம் பாடி உயிர்களைத் தொட்ட வார்த்தைகளில் என்றும் ஒரு குழைவு. பயணங்களில்,விஷேசங்களில், தனிமையில், கூட்டத்தில் எங்கும் துணை நிற்கும் ஒரே குரல். நாற்பதாயிரம் பாடல்களை கடந்து இன்றும் இந்த கொரானா கோரதாண்டவத்திலும், நேரலையில்,பாடல் பிறந்த  கதை சொல்லி,பாடி மகிழ்வித்த குரல். சூப்பர் ஸ்டார்களின் தெலுங்கு குரலாய் பேசி, காதலனுக்கு அப்பாவாய் டான்ஸ் ஆடி, ச...

டிக் டாக் டிக் டாக்

                    “காலம் பொன்போன்றது” “காலம் யாருக்காகவும் காத்திருக்காது” “உலகில் உள்ள எந்த செல்வத்தினாலும் இழந்த காலத்தை வாங்க முடியாது” போன்ற பழமொழிகள் பல கேட்டிருக்கிறோம்.காலத்தை பற்றி நிறையச்சொல்லி ஒழுக்கத்தை வளர்த்திருக்கிறோம்.ஆனால் காலம் என்ற ஒன்றே இல்லை,அது ஒரு மாயை என்று கூறுபவர்கள் உண்டு.   Timelessness  என்று ஒரு தியரி, அதாவது, நீங்கள் இப்போது பத்துமணி,இருபது நிமிடம்,முப்பது விநாடிகள் என்று சொல்லும்போதே அந்த நேரம் இருப்பதில்லை.                 “DARK”  என்ற ஜெர்மனிய மொழித்தொடர் காலத்தைப் பற்றி சயின்ஸ்ஃபிக்சன் வடிவில் கதை சொல்கிறது.கற்பனை நகரமான வின்டண் -இல்,காலத்தில் பின்நோக்கி சென்றால்,முன்நோக்கி சென்றால் என்னவாகும்,என்ன செய்ய முடியும் என்று முயற்சி செய்யும் கரெக்டர்கள். முப்பத்திமூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் பேரழிவு,மூன்று உலகங்கள்,நான்கு குடும்பங்கள்,ஏழு காலகட்டங்கள்,ஒரே மாதிரி நிகழும் சம்பவங்கள்,முடிவில்லாத காலச்சக்கரம் எ...