வைரஸ் ஆழிப்பேரலை

 பஞ்ச பூதங்கள் ஐந்தையும் நாசம் செய்து

நிலாவில் குடியேற நாள் குறித்து

இறுமாப்புடன் இருந்த மனிதனை

கண்ணுக்குத் தெரியாத ஜீவன் ஒன்று

அடங்குடா அடங்கு என வீட்டில் முடக்கியது.

பள்ளி கல்லூரிகள் இல்லை

கோயில் திருவிழாக்கள் நடக்கவில்லை

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கவில்லை

ஆறு மாதங்கள் பேயாட்டம் ஆடி

மனித மாணிக்கங்கள் பலரையும் கொண்டு சென்றது.

கொஞ்சம் அடங்கிய போது

முக கவசம் அணிந்து சென்றால்

உங்களுக்கு இன்னும் கொரனா போகலையா

இதை யாரு போட்டுக் கிட்டே இருப்பா

இதுவே மூச்சு முட்டுகிறது

வீட்டில் உள்ளேயே இருந்தா பைத்தியம் பிடிக்கும் போல

குழந்தைகள் பாவம் எவ்வளவு நேரம்

ஆன்லைன் மூலம் படிக்கிறது

டெஸ்ட் வைச்சா பாதிபேர் காப்பி அடிக்கிறது

ஸ்கூல் லாம் அனுப்ப முடியாது

குழந்தைகளுக்கு வந்திட்டா

ஸ்கூல் பீஸ் கட்ட வைக்க இப்படி பண்றாங்க

இதென்ன அநியாயம் எல்லாரும் பாஸாம்

படிக்கிற பிள்ளை க்கு என்ன மரியாதை

தடுப்பு ஊசி போடலாமா வேண்டாமா

பக்க விளைவுகள் ஏற்படுமா?

உடன்பிறப்பே

இரத்தின் ரத்தமே

தம்பி தமிழா

டார்ச் லைட்டில் ஒளி பாய்ந்து

குக்கரில் விசில் அடித்து

இது வரை மலரா தாமரை

சீசன் மாம்பழம்

எல்லாம் சீர் தூக்கி

விரலில் மையிட்டு

முடிந்தது ஜனநாயக கடமை.

அப்பாடா இனியாவது எல்லாம் மாறுமா

என்று பெருமூச்சு விட்டால்

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு

அழையா விருந்தாளியாக

திரும்பவும்  முதல்ல இருந்தா

தலை சுற்றுகிறது மூச்சு முட்டுகிறது

வட இந்தியாவில் நடப்பது பார்த்து கண்கள் கலங்குகிறது

ஆந்திர வேரியண்ட் என்று அலற

மூச்சு திணற, ஆக்ஸிஜன் இல்லை,

ஆஸ்பத்திரியில் இடம் இல்லை

ஓயாத ஆம்புலன்ஸ் சைரன்,

தடுப்பூசி எனும் ஆயுதம் தட்டுப்பாடாகி போக,

உயிர் காக்கும் ரெம்டிஸ்வியரை கைப்பற்ற நீண்டதொரு வரிசை

நெல்லூரின் மூலிகை மருந்து இவை அனைத்துக்குமே சவால் விட்டது.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெற  சாத்தியம் இல்லை

முடங்கி போனோம் பதினைந்து மாதங்கள்

பொருளாதாரம் இருபது ஆண்டுகள் பின் சென்று விட்டது

இது எப்போது முடியும் என்ற ஏக்கம்

மூன்றாம் அலை வேறு வருமாம்

ஆண்டவனே எங்களை காப்பாற்று!


Comments

  1. நான்காம் அலை வேறாம் . கூடவே மஞ்சள் கருப்பு வெள்ளை என பூஞ்சைக் காளான் நோயையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது . கடவுள் தான் காப்பாற்றணும்

    ReplyDelete
  2. ஆம். கடவுள் தான் இந்த சூழலில் இருந்து நம்மை காக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!