முடக்கம்

ஊரடங்கின் ஆரம்பத்தில், 
விதவிதமான உணவு பதார்த்தங்கள் செய்வது,
அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேடஸ்,
வீட்டிலேயே யோகா,,எட்டு வரைந்து வாக்கிங்,
வீட்டில் அனைவரும் வேலைகளை பகிர்வது,
சீட்டு விளையாடுவது,சினிமா பார்ப்பது என்று
மூன்று வாரங்கள் சமூக வலைதளங்கள் களைகட்டின
பழைய சித்திதான் நல்லாருக்கு,
இராமாயணம்,மகாபாரதம் பார்க்கிறோம்,
நெட்பிளிக்ஸ் ல மணிகஸ்ட் சூப்பர்.
சிலநாட்களில்,இதல்லாம் எப்ப முடியும்னே தெரியலையே,
போரடிக்குது,
சேக்ஸ்பியர் சொன்னமாதிரி எல்லாநாட்களும் விடுமுறையாக இருந்தால்,
விடுமுறைநாட்கள் கூட மனச்சோர்வடையச் செய்யும்.
ஜனவரில சீனாக்காரன் கண்டதை சாப்பிட்டு அவதிபடுறான்,
பிப்ரவரில நம்மூர் வெயிலுக்கெல்லாம் அது வராது,
மார்ச்ல நம்ம இந்தியன் ஜீனுக்கெல்லாம் லேசா வந்திட்டுபோயிடும்
ஏப்ரலில் இந்தியால இறப்புவிகிதம் குறைவுதான்
மேமாதம் சென்ரல்,ஸ்டேட் கவர்மெண்ட் எதுவுமே சரியில்லை
முதல்லயே ஏர்போர்ட்ல்லாம் மூடியிருக்கணும்
ஜூன்ல மூயுடேட் ஆயிருச்சாம்,எந்த அறிகுறியும் தெரியாம
 சின்ன வயசு ஆட்கள் இறக்கிறார்களாம்.
இப்ப எல்லாத்தையும் அரசாங்கம் மூடலாமே!
எல்லோர்மனதிலும் ஒரு இனம்புரியாத பயம்!
இது எப்போ முடியும்?!
இன்று வாட்ஸ்அப் இல் ஒரு பகிர்வு
நாளைய சூரியகிரகணம் ரொம்பவே வீரியமானது,
டிசம்பர் 26 சூரியகிரகணத்தால் ஆரம்பித்த கொரானா
நாளைய சூரியகிரகணத்திற்க்குப்பின் படிப்படியாக முடிவுக்குவரும்.
இதையும் நம்புவோம்,நம்பிக்கை தானே வாழ்க்கை!

Comments

  1. நடந்தவற்றையும் இப்போது மனதில் ஓடுவதையும் அப்படியே படம் பிடித்த மாதிரி பதிவு சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. Thank you Sensei!you have encouraged me a lot!

      Delete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!