கால சக்கரம்
சந்தோஷ் இன்று சந்தோசமாக இருக்கிறான் .அவனுக்கு அது கிடைத்துவிட்டது. அவனால் அதை நம்ப முடியவில்லை ,அவன் முன்னால் இருந்த டைம்மெஷினை பார்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தான். இதன் மூலம் காலத்தின் முன் சென்று அவன் செய்த பெரிய தவறுகளை மாற்றலாம். டைம்மெஷினை ஆன் செய்தான். அதன்மேல் ஏறி நின்றான்.வேகமாக சுழன்றது. சந்தோஷ் வந்து சேர்ந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப். நின்று இருந்தவர்களின் ட்ரஸிங் வித்தியாசமாக இருந்தது. ஆண்கள் ப்ளாசோ பேண்ட் போட்டிருக்கிறார்கள். அங்கிருந்த டீ கடையில் தொங்கிய தினமுரசை கவனித்தான், 12.7.1984. சரியாகத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான். இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். Spring Field Nursery—- என்ற போர்ட் போட்ட கட்டிடத்தின் உள்ளே சென்றான். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள...