கால சக்கரம்

               சந்தோஷ் இன்று சந்தோசமாக இருக்கிறான்

.அவனுக்கு அது கிடைத்துவிட்டது.

அவனால் அதை நம்ப முடியவில்லை

,அவன் முன்னால் இருந்த டைம்மெஷினை பார்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தான்.

இதன் மூலம் காலத்தின் முன் சென்று அவன் செய்த பெரிய தவறுகளை மாற்றலாம்.

டைம்மெஷினை ஆன் செய்தான்.

அதன்மேல் ஏறி நின்றான்.வேகமாக சுழன்றது.

                 சந்தோஷ் வந்து சேர்ந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப். 

நின்று இருந்தவர்களின் ட்ரஸிங் வித்தியாசமாக இருந்தது. 

ஆண்கள் ப்ளாசோ பேண்ட் போட்டிருக்கிறார்கள்.

அங்கிருந்த டீ கடையில் தொங்கிய தினமுரசை கவனித்தான், 12.7.1984. சரியாகத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான்.

 

                  இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான்.

Spring Field Nursery—-என்ற போர்ட் போட்ட கட்டிடத்தின் உள்ளே சென்றான்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அவனை அவனே தேடினான்.

அதோ தாராவுடன் சீ சா ஆடிக்கொண்டு சந்தோஷ். 

பக்கத்தில் சென்றான்.

“தாரா! இந்த சந்தோஷ் ரொம்ப கெட்ட பையன்,அவன் கூட விளையாடத ஒ.கே!. என்றான்.

தாரா முழித்துப்பார்த்தாள். அதே முட்டை கண்கள்.

 “டீச்சர்! பிள்ளை புடிக்கிற பூச்சாண்டி வந்திருக்கான்” என்று அவள் கத்த, 

சந்தோஷ் வேகமாக வெளியே வந்தான்.”சந்தேகப் பிறவி! சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் போல”.

                   டைம்மெஷினின் அடுத்த ஸ்டாப் ,Bishop High school.

உள்ளே சென்று பார்த்தால்,

அங்கே தாராவுடன் கைகோர்த்து நடந்து கொண்டிருந்தான் டீன்ஏஜ் சந்தோஷ் . 

Dairy milk bar chocolate 🍫 அவள் பாதி கடித்து இவனுக்கு கொடுக்க, 

இவன் கடித்து விட்டு மீதியை அவளுக்கு கொடுக்க 

ஒரே ரொமான்ஸ் தான். 

படிக்கிற வயசில நான் பண்ணின வேலைய பாரு?! ஒழுங்கா படிச்சிருந்தா ஐஐடி போயிருப்பேன்.அமெரிக்காவில் செட்டில் ஆயிருப்பேன். 

கனவு கண்களில் இருந்த அந்த சந்தோஷிடம் சென்று,

“தம்பி! இந்த பொண்ணு கூட சுத்தாத, 

ரொம்ப பிடிவாதமான பொண்ணு,கோபம் வந்தா,கையில் கிடைக்கும் பொருளை எல்லாம் தூக்கி தூக்கி எறியும், போய் படிக்கிற வேலைய பாரு” 

சந்தோஷ்! இந்த அங்கிள் யாரு?! என்று தாரா கேட்க

,”தெரியாது” என்றான் டீன்ஏஜ் சந்தோஷ்.

 “தெரியாதவங்க கிட்ட பேசாதன்னு சொல்றேன்ல”. என்று தாரா மிரட்ட

“ஆமாமா! நீயும் ஆண்ட்டி ஆகத்தானே போற” என்று மனதுக்குள் கருவிக்கொண்டே டைம்மெஷினில் ஏறினான்.

                       

                          காலேஜ் முன் நின்றான்.

ஜோடி ஜோடியாக பைக்கில் பறந்து கொண்டிருந்தார்கள் இளவட்டங்கள்.

.”சைத்தான் மனசில ஏறி ஆடுற வயசு போல” என்று நினைத்துக்கொண்டான். 

அதோ சந்தோஷும், தாராவும் வாக்குவாதம் செய்துகொண்டே நடந்து வந்தனர்.

“இட்ஸ் ஓவர்! ஐ கான்ட் டேக் இட் எனிமோர்”! என்று தாரா சொல்லிக்கொண்டே செல்ல 

,”ஏய் தாரா! அப்படி சொல்லாதே! செத்திருவேன்டி! என்று பின்னாலேயே ஓடினான் சந்தோஷ். அவளோ ஆட்டோ ஏறி போய்விட்டாள்.

                 கலங்கிய கண்களுடன் காலேஜ் பையன் சந்தோஷ் நின்று கொண்டிருக்க,

“பரவாயில்லை சந்தோஷ் விடு! இத்தோடு வாழ்க்கை முடிந்து போய்விடாது, 

உனக்குன்னு ஒருத்தி இன்னும் அழகா,குணமா வருவா! 

தாராவை மறந்திடு” என்று அட்வஸ் செய்தான்.” 

“இல்லை சார்!

ஒரு சின்ன மிஸ்அண்டஸ்டடிங்க் தான்! 

நாளைக்கு கெஞ்சி,காலில் விழுந்தாவது அவளை சமாதானப்படுத்திருவேன்.”

 “டேய்! ஏன்டா உனக்கு 

புரியலை,நீ காலுல விழுந்தாலும் அவ மாறமாட்டா!”.

 அவன் கோபமாக,”யார் நீங்க உங்களுக்கு என்ன தெரியும் அவளைப் பத்தி?,”

“எனக்கு எல்லாம் தெரியும்டா!, சொன்னா கேளுப்பா, 

உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்,தாராவை மறந்துடு” என்று கிட்டதட்ட கெஞ்சினான் சந்தோஷ்.

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே சார்”! என்று அவன் கேட்க...

 இந்த டைம்மெஷின் ஏன் விடாம இந்த சத்தம் கொடுக்குது. 

தலை வலிக்குது.ஆ! சத்தம் நின்று விட்டது! 

அப்பாடா! என்று நினைத்தான் சந்தோஷ்.

                 “இந்த லாக்டவுன் வந்ததிலிருந்து இதே பொழப்பு தான்! நைட்லாம் வெப் சீரிஸ் பார்க்க வேண்டியது, காலையில் எத்தனை ரிங்க் அலாரம் அடித்தாலும் தூங்க வேண்டியது, எப்ப தான் இதெல்லாம் முடியப்போகுதோ?!” என்று மனைவியின் குரல் கேட்டதும் எழுந்து உட்கார்ந்தான் சந்தோஷ்.”இரண்டு மணி வரைக்கும்,நெட் பிளிக்ஸ் இல் ,

“DARK” பார்த்தேனா, காலையில தூங்கிட்டேன், சாரி  தாரா டார்லிங்!

 

 

 

பின் குறிப்பு——- DARK is a German language thriller available in Netflix which is about Time Travelling 🧭

 

 

      

 

Comments

  1. இது மாதிரி படங்கள் பார்த்தா இப்படித்தான் ஆகுது. அதனாலே நான் நெட் பிலிக்ஸ் பக்கமே போறதே இல்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!