கற்றலும் பெற்றலும்

                                        கற்றலும் பெற்றலும்

 

       பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன.பாரதி ஆர்வமாக தன் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.பிரமாதமான மதிப்பெண்கள் இல்லை.யாரிடமும் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கும்.ஆனால் பாரதி அதைப்பற்றி கவலைப்படவில்லை.பாரதிக்கு கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் இல்லை.சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் செல்லவில்லை.அதுக்கெல்லாம் பணவசதி இல்லை.தனக்கு புரிந்த,முடிந்த படிப்பைப் படித்து இந்த மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறாள்.

                     உடன்படிப்பவர்கள் எல்லாம் போன் செய்ய ஆரம்பித்தார்கள்.”நீ மேக்ஸ் இல் எவ்வளவு?,கெமிஸ்ட்ரி,பயோ வில் நல்ல மார்க்கா? என்று தாரிணி கேட்டாள்.பாரதி சொன்ன பதிலைக் கேட்டு,”ஏன் குறைந்துவிட்டது? மறுமதிப்பீடுக்கு அப்ளை செய்யப் போகிறாயா?” என்றெல்லாம் கேட்டாள்.பக்கத்து வீட்டு மாமி,”என்ன பாரதி நல்ல மார்க்கா?இல்லைன்னா இங்க எந்த நல்ல காலேஜிலும் இடம் கிடைக்காது,கட் ஆஃப் லாம் நிறைய வேணும்” என்று படபடத்தார்கள்.

                 பாரதியின் அப்பா “பெரிய தொகை கொடுத்து சீட் எல்லாம் வாங்கமுடியாது,அதனால கவர்மண்ட் காலேஜிலேயே படிக்கட்டும்” என்றார்.தனியார் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிக்க அதிக மதிப்பெண்கள் தேவை.அதிக கட்டணம் செலுத்தினால் தான் குறைந்த மதிப்பெணகள் பெற்றவர்கள் படிக்க முடியும்.பாரதிக்கு இரண்டுமே சிக்கல்தான்.வேறு வழி இல்லை,அப்பா சொன்னது போல் கவர்மென்ட் காலேஜில் இலக்கியம் படிக்கலாம் என்று தோன்றியது.

                 “கவர்மென்ட் காலேஜியிலா படிக்கப்போற,எக்ஸ்போஸர் இருக்காது,அங்கே வரும் மாணவிகளுக்கு ஏன் ஆசிரியர்களுக்கு கூட இங்கிலிஷ் சரளமாக பேச வராது” என்று பாரதியின் அத்தை சொன்னாள்.அத்தையின் குழந்தைகள் சிபிஎஸ்இ ஸ்கூலில் படிக்கிறார்கள்.நன்றாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் அவர்களால் முடியும். “அத்தை நான் ஆங்கில இலக்கியம் படிக்க போறேன்” என்றாள் பாரதி.  “இலக்கியமா?, இந்த காலத்தில் இலக்கியம் படிச்சு என்ன பண்ண போற? பி.ஏ க்கு என்ன மதிப்பு இருக்கு, பி.இ க்கே ” இப்போது மதிப்பு இல்லை என்று பொங்கினாள் அத்தை.  “என்ன பண்ணபோறேன்னுலாம் அப்புறம் தான் யோசிக்கணும் அத்தை” என்றாள்.”அப்புறம் யோசிப்பியா?இதெல்லாம் முதல்ல இருந்தே ப்ளான் பண்ணனும்,இல்லையின்னா கஷ்டமாயிடும்” இது மாமாவின் வார்த்தைகள்.

              “என்ன கஷ்டமாகும்?!”என்று கேட்டாள் பாரதி. “உனக்கு ஒண்ணும் புரியலைடி பாரதி! முதல்லயே நல்ல காலேஜ் நல்ல கோர்ஸ் சேர்ந்துட்டா வாழ்க்கை பூரா பிரச்சனை இல்லை” என்றாள் ஊக்கமாக. “அப்போ பீஸ் கட்ட பணம் கொடு,நான் நல்ல காலேஜில் படிக்கிறேன்” என்று பாரதி முடிக்கும்முன்,”அய்யோ! நான் எங்க போவேன் பணத்துக்கு, என் பசங்களுக்கு பீஸ் கட்டவே என்தாவு தீர்ந்து போகுது” என்று புலம்பி அத்தோடு நிறுத்திக்கொண்டாள் அத்தை.

                “கவர்மன்ட் காலேஜிலேல்லாம் மாடர்ன்னா ட்ரஸ் பண்ண முடியாது,ஷால் பின் பண்ணி சுரிதார் போடணும்,அங்கேல்லாம் படிக்க முடியுமா? காலேஜ் லைப் னா என்ஜாய் பண்ணனும்ல” என்று குழப்பினாள் எதிர்வீட்டு வாணி.”பாரு,நானெல்லாம் இந்த காலேஜில் (பெயர் வேண்டாம்) படிப்பதால் தான் என்னை இந்த தெருவிலே மதிக்கிறார்கள்,உன் அப்பாகிட்ட எப்படியாவது அடம்பிடித்து எங்க காலேஜில் சேர்த்துவிட சொல்லு” என்று அழுத்தமாக சொன்னாள் வாணி .மனது அலைபாய்ந்தது பாரதிக்கு.ஆனாலும் “அப்பா பாவம்,கஷ்டபட வைக்க வேண்டாம்” என்று முடிவு செய்தாள் பாரதி.

                 அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்தாள் பாரதி. முதல்நாள் அறிமுகங்கள் நிகழ்ந்தன.அடுத்த நாள் ஆசிரியர் பாடத்தை தொடங்கினார்,

Newman’s Ideas of University ஆரம்பித்தார். “All branches of knowledge are connected together, no subject is good or bad,Knowledge has its own end”. கற்றல் கற்றலுக்காக மட்டுமே! பாரதி சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

Comments

  1. கற்றல் கற்றலுக்காக மட்டுமே.
    எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் திறமை இருந்தால் எந்த வேலையையும் திறம் படச்செய்து பெயர் வாங்கலாம்

    ReplyDelete
  2. Many students' current situation. Till date many arts college in Virudhunagar district collect least fee for courses with highly standard education.

    ReplyDelete
    Replies
    1. Yes nivetha! We are polished there only.thank you 😊

      Delete
  3. Learning, learners choice n freedom, no-one has right to interpret it. Well said dear.

    ReplyDelete
    Replies
    1. Learning should be a happy process, not a burden.thank you 😊 Aruna

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!