உதயகீதம் எஸ்.பி.பி.


ஆயிரம் நிலவே வா வில் தென்றலாய் வருட ஆரம்பித்து,

இன்று சும்மா கிழி கிழி என்று உரக்க ஒலித்த குரல்.

சங்கராபரணமோ! என பக்தியில் திழைத்த 

காதல் ரோஜாவே என்று உருகிய

தங்கதாமரை மகளே என்று மருகிய

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிய 

மக்கள் திலகம்,நடிகர் திலகம்

காதல் மன்னன்,காதல் இளவரசன்

நவரச நாயகன்,மைக் மோகன்

தல,தளபதி

ராமாராவ்,நாகேஸ்வர ராவ்

பால கிருஷ்ணா,சிரஞ்சீவி,

பவன்கல்யாண்,மகேஷ்பாபு,

நாகார்ஜூனா,நாகசைத்ன்யா

மம்முட்டி மோகன்லால்

ராஜ்குமார் விஷ்ணுவர்த்தன்

சல்மான் சஞ்சய்...

என அனைவரின் 

காதல்,மோதல்,உற்சாகம்,

கருத்து,துன்பம்,துயரம்

என்று யாவருக்கும் பொருந்தும் குரல்.

மென்மை,வலிமை ஆக எந்த தொனியிலும், 

ஏற்றமாய் ஊக்கமாய் பாடும் கம்பீரம்,

உதயகீதம் பாடி உயிர்களைத் தொட்ட

வார்த்தைகளில் என்றும் ஒரு குழைவு.

பயணங்களில்,விஷேசங்களில்,

தனிமையில், கூட்டத்தில்

எங்கும் துணை நிற்கும் ஒரே குரல்.

நாற்பதாயிரம் பாடல்களை கடந்து இன்றும்

இந்த கொரானா கோரதாண்டவத்திலும்,

நேரலையில்,பாடல் பிறந்த 

கதை சொல்லி,பாடி மகிழ்வித்த குரல்.

சூப்பர் ஸ்டார்களின் தெலுங்கு குரலாய் பேசி,

காதலனுக்கு அப்பாவாய் டான்ஸ் ஆடி,

சிபிஐ ஆபிசராய்,நடுத்தர வயது காதலனாய்,

இடையே இசை அமைப்பாளராய் மிளிர்ந்த,

 எல்லோருக்கும் பிடித்த ஏகோபித்த குரல்.

மூச்சு விடாமல் பாடியவர் 

இன்று உயிர்மூச்சுடன் போராடிக்கொண்டிருக்கிறார்,

நீங்கள் இன்னும் பல நூறு காலம் வாழ்ந்து, 

பல்லாயிரம் பாடல்கள் பாட,

கேட்டு மகிழ நாங்கள் இருக்கிறோம்.

எழுந்து வாருங்கள் எ.ஸ்.பி.பி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. I too join you in praying for his speedy recovery
    His songs in Sankarabaranam are super & you can listen to them anytime anywhere
    Why I mention them is all the songs arecarnatic music based.But SPB has not learnt carnatic music from any guru

    ReplyDelete
    Replies
    1. Thank you sir! Sankarabharanam's songs appeal to soul. SPB 's voice and tone is one in billions, that's why he is loved by all. Praying for his recovery.

      Delete
  2. God is there. Our sincere prayers bring back our sensual singer again.

    ReplyDelete
  3. Well written kka. Will join u in prayers

    ReplyDelete
  4. Wow. Great one. let's pray for his speedy recoveey

    ReplyDelete
  5. அவர் நலமுடன் எழுந்து வர இறைவனிடம் வேண்டுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!