டிக் டாக் டிக் டாக்

                    “காலம் பொன்போன்றது” “காலம் யாருக்காகவும் காத்திருக்காது” “உலகில் உள்ள எந்த செல்வத்தினாலும் இழந்த காலத்தை வாங்க முடியாது” போன்ற பழமொழிகள் பல கேட்டிருக்கிறோம்.காலத்தை பற்றி நிறையச்சொல்லி ஒழுக்கத்தை வளர்த்திருக்கிறோம்.ஆனால் காலம் என்ற ஒன்றே இல்லை,அது ஒரு மாயை என்று கூறுபவர்கள் உண்டு. Timelessness என்று ஒரு தியரி, அதாவது, நீங்கள் இப்போது பத்துமணி,இருபது நிமிடம்,முப்பது விநாடிகள் என்று சொல்லும்போதே அந்த நேரம் இருப்பதில்லை.

               “DARK” என்ற ஜெர்மனிய மொழித்தொடர் காலத்தைப் பற்றி சயின்ஸ்ஃபிக்சன் வடிவில் கதை சொல்கிறது.கற்பனை நகரமான வின்டண் -இல்,காலத்தில் பின்நோக்கி சென்றால்,முன்நோக்கி சென்றால் என்னவாகும்,என்ன செய்ய முடியும் என்று முயற்சி செய்யும் கரெக்டர்கள். முப்பத்திமூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் பேரழிவு,மூன்று உலகங்கள்,நான்கு குடும்பங்கள்,ஏழு காலகட்டங்கள்,ஒரே மாதிரி நிகழும் சம்பவங்கள்,முடிவில்லாத காலச்சக்கரம் என ஜோனஸும்,மார்த்தாவும் கடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பு குறையாமல் சொல்லிருக்கிறார்கள்.

                 தனக்கே தான் பாட்டியாகும் சார்லட், அம்மாவிற்கே அம்மா ஆகும் எலிசபத், நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலம் சென்று வளர்ந்து வரும் மைக்கேல், காலத்தின் முன் சென்று அப்பாவின் மரணத்தை நிகழாமல் செய்ய முற்படும்போது,அப்பாவின் மரணத்திற்கு தானே தவிர்க்க முடியாத காரணமாகும் கிளாடியா என ஏகப்பட்ட கிளிஷேக்கள்.சற்றே கவனம் தவறினாலும் புரியாது போகும் திரைக்கதை

 

                 பிரச்சனையின் வேருக்குள் சென்று முடிவை அமைக்க முயற்சிக்கும் போது,அளவில்லா பாசப்பிணைப்புதான் அனைத்து தவறுகளுக்கும் காரணமாகி இருக்கிறது தெளிவாகிறது. எந்த உலகிலும் நாம் இல்லாவிட்டாலும், நாம் இருவர்தான் மிகச்சரியான இணை என்று சொல்லி மறையும் ஜோனஸூம்,மார்த்தாவும் மனதைவிட்டு அகல மறுக்கிறார்கள்.

                   .

                  காலத்தின் பின்னோக்கிச் செல்ல டைம்மெஷின் இருந்தால், இதையெல்லாம் மாற்றலாம்,இந்த தவறுகள் நேராமல் செய்யலாம் என்று நாம் கூட பல நேரங்களில் நினைப்பதுண்டு.ஆனால் இங்கே அதை செய்ய முற்படும் நபர்கள்,எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது,நிகழ்ந்தவைதான் மீண்டும் நிகழும்.அப்போதுதான் புரியும் காலத்தின் வலிமை. வில்லில் இருந்து புறப்பட்ட  அம்பு சென்றது சென்றதுதான்.

                 

Comments

  1. நான் கூட இதையே வேறு விதமாக நினைப்பது உண்டு. Control Z மட்டும் இருந்தால் .....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!