பேரைச் சொல்லவா!
வேல், வேல், வெற்றி வேல்,
வேல் இருக்க வினையும் இல்லை,
மயில் இருக்க பயமும் இல்லை,
அடைவோம் கந்தன் சேவடி
என்று சூலமங்கலம் சகோதரிகள் உணர்ச்சிபூர்வமாக பாடிக் கொண்டு இருந்தார்கள். பழைய பாடல் தான் என்றாலும் இன்று வரை மனதை தொடும் பாடல்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை, என் பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எங்க அம்மா கிட்ட, " ஒரு குக்கிராமத்தில் கூட மாடர்னா பேர் வைக்கிறார்கள், எனக்கு ஏன் இந்த பெயர் வைச்சிங்க? சம்மந்தமே இல்லாமல் இரண்டு பெயர் ஒன்று சேர்த்து, அர்த்தமே இல்லை " என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். "ஆச்சி தான் இந்த பெயர் உனக்கு வைத்தார்கள்" என்று அம்மா தப்பித்துக் கொள்வார்கள்.
ஆச்சியிடம் அடிக்கடி தொணதொணப்பேன், "ஏன் ஆச்சி இப்படி ஒரு பெயர் வைச்சிங்க?! ". அதற்கு ஆச்சி, " அழகோடும், அறிவோடும் என் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் உன் பெயர் வைக்கிறேன் முருகா! " என்று வேண்டிக் கொண்டேன் என்றார்கள் பெருமையாக. எனக்கு அது மிகை தான் என்பது வேறு விஷயம். எல்லா ஆச்சிகளுக்கும் பேரப்பிள்ளைகள் உசத்தி தான்.
வேல், ஒரு அகலமான, கூர்மையான ஆயுதம், அது அறிவைக் குறிக்கும் என்று விளக்கம் கொடுத்தது கோனார் உரை. நமக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தால் சரி என்று ஆசைப்பட்டது உண்டு.
ஸ்கூல் படிக்கும் போதும், காலேஜ் சென்றபோது கூட, யாராவது பெயர் கேட்டால், சத்தமில்லாமல், மெதுவாக கூறுவேன். என்ன ❓ என்று இரண்டாம் முறையாக கேட்பவர்கள் அதிகம்.
"ஏய்! உன் பேரு கூப்பிடவே என்னமோ மாதிரி, ஆம்பளை பேரு கூப்பிடறமாதிரி வெட்கமாக இருக்கு" என்று என் உயிர்த்தோழி கூறினாள். எனக்கு கூட அப்படி தான் தோன்றும். ஆனால் ஷேக்ஸ்பியர் சொன்னது போல், "பெயரில் என்ன இருக்கிறது " என்று சமாதானம் அடைவேன்.
பிடிக்கவில்லை என்றாலும் இந்த பெயருடன் வாழ பழகிக் கொண்டேன்.
செவ்வாய் கிழமை முருகனுக்கு உகந்த நாள், அன்று பிறந்தவர்கள் முருகன் பெயர் வைச்சிங்க நீங்க ரொம்ப லக்கி! என்று போன வருடம் டிவி யில் ஜோசியரும் சொன்னார். ஆகா! இப்படி வேறு இருக்கிறதா! என்று அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். முழுமையான தமிழ் பெயர் கொண்ட தமிழச்சி நீ என்று என் கணவர் கூறும் போது பெருமையாக இருந்தது.
இன்று தோழிகள், "ஹாய் வேல்! " என்று உரிமையாக வாட்ஸ்அப் , முகநூலில் கூப்பிடும் போது நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் கூட "ஹாய் வேல்" தான் சொல்கிறது. ஆனால் நான் இப்போது யாத்திரை செல்லும் எண்ணத்தில் இல்லை. 😃
it is a great inspiration to everyone!
ReplyDeletekeep on writing!
very nice!
by catherine
Thank you😊❤
DeleteI had a friend, her name is velvizhi i usually called her as vel. It's also stylish.
ReplyDelete😄😍
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNice flow of writing dear velselvi.👌👍
ReplyDeleteThank you😊 🙏 Rani!
Deleteசெம்ம write up வேல் செல்வி
ReplyDeleteThank you❤😊
Delete