மீனாட்சி சுந்தரேஸ்வரர்



நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது, “மீனாட்சி சுந்தரேஸ்வரர்”.
முதல் நாளில் இருந்து விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் பஞ்சமில்லை. 
பாக்ய ஸ்ரீ யின் மகன், அபிமன்யு, சுந்தரேஸ்வரராகவும், 
சனயா மல்கோத்ரா மீனாட்சியாக
நடித்திருக்கிறார்கள். 
மதுரையில் ஆரம்பித்து பெங்களூரு நகர்கிறது கதை. 
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தென் தமிழக பீலிங் வருகிறது. 
சில தமிழ் முகங்கள், பெயர்கள், கோயில்கள்
மற்றபடி கதைக்கும், மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
மதுரை என்றாலே ஜிகர்தண்டா, கறித்தோசை, 
தமிழ்நாடு என்றாலே “தலைவா ரஜினிகாந்த்” போன்ற கிளிஷேக்கள்  அயர்ச்சியைக் கொடுக்கின்றன. 
மதுரையில் செட்டி நாட்டு ஸ்டைல் வீடு  ஓகே! 
ஆனால் பில்டர் காபி மெட்ராஸா? மதுரையா? மக்களே?! 
பவ்யமான, மாநிறமான, சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் 
சுந்தரேஸ்வரராக அபிமன்யு பொருந்திப் போகிறார். 
அளவான நடிப்பு, பாக்ய ஸ்ரீ யின்
புன்சிரிப்பு இருப்பதாலோ, இல்லை, வேஷ்டியில்
 டும் டும் டும் மாதவனை ஞாபகப்படுத்தியதினாலோ என்னவோ அபிமன்யுவை
எனக்கு பிடித்து விட்டது. 
ஆனால் மீனாட்சியாக சனயா மல்கோத்ரா பொருத்தம் இல்லை. 
இந்த தலைமுறையில், மதுரையில்
பார்டர் வைத்த சேலை கட்டி, கொண்டை போட்டு, அதைச் சுற்றி மல்லிகை பூ வைத்து யார் இருக்கிறார்கள்?! நான் பார்த்தது இல்லை. 
அப்பா பயம், வேலை செய்யும் முனைப்பு, அதற்காக கல்யாணம் ஆன உடனே பிரிவு. 
வேலையை நிலைநாட்ட சொல்லும் பொய்கள். 
அசைவ உணவு, சிகரெட், மதுவகைகள் --வீட்டிற்கு தெரியாமல் எப்போதாவது  ஒகே!. 
பார்க்க அப்பாவியாக இருக்கும் அடப்பாவிகள்  மதுரைக்காரர்கள் என்று டைரக்டர் சொல்லாமல் சொல்கிறார். 
முதல் நாள் முதல் ஷோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு தியேட்டரில்
 மீனாட்சி குத்தாட்டம் போடுவதெல்லாம் ஓவர், 
அதுவும் தர்பார் க்காக! ஈஸ்வரா!
இது எங்காவது நடக்குமா?! 
தல—தளபதி தலைமுறை வந்தே வெகுகாலம் ஆகிவிட்டது, 
தயவு செய்து அப்டேட் ஆகுங்கள்  வடநாட்டு படத்தயாரிப்பாளர்களே! 
வேஷ்டிக்கும், லுங்கிக்கும்  வித்தியாசம் தெரியாத படம், 
மீனாட்சி சுந்தரேஸ்வரர்! 
சொக்கா! உனக்கு கேட்க வில்லையா?! 



Comments

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!